முஹம்மது முஸப்பிர் / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தின் மகாகும்புக்கடவல பிரதேச செயலகத்துக்குட்பட்ட மொகரியக் கிராமத்தில் காட்டு யானையொன்று, நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக, வனவளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த காட்டு யானை, அக்கிராமத்தில் உள்ள தென்னந்தோட்டங்களினுள் புகுந்து அங்குள்ள பலன் தரும் தென்னை மரங்கள் பலவற்றை அழித்து வந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கு வரும் காட்டு யானைகளை, இக்கிராமத்தில் இருந்து விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இந்த காட்டு யானை உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .