2025 மே 02, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை கௌரவிக்கும் நிகழ்வு,  இம் மாதம்  20ஆம் திகதி,  பாலாவி- நாகவில்லு "White Reception Hall" இல் நடைபெறவுள்ளது.

புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் பேரவையின், புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.சபீக் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில்,  நீர்பாசன அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் மாவட்டச்  செயலாளர் சந்திரசிறி பண்டார, மேலதிக செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், புத்தளம் மாவட்ட பிரதி  பொலிஸ் மா அதிபர் நிமல் பண்டார, புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.எஸ்.அப்துல் காதர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது , புத்தளம் மாவட்டத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிவரும் சமாதான நீதவான்கள், சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து,  தெரிவுசெய்யப்பட்ட 135 பேர் "Dr C.W.W.KANNANGARA" விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X