2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குடிநீர் தேவையை நிவர்த்தி செய்தது மகி்ழ்ச்சியளித்துள்ளது

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேசத்தில் முசல்பட்டி கிராமத்தின் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வரும் சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு முடிந்தததையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அங்கு நிறுவப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதியை (RO Plant) வியாழக்கிழமை (02) பிற்பகல் சென்று கண்காணித்த பின்னர், கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அங்கு பொருத்தப்படுவதன் பயனாகவும், அந்த இடத்துக்கு அண்மையில் நிறுவப்பட்டுவரும் 1,60,000 கன லீற்றர் கொள்ளளவுடைய நீர் தாங்கியின் ஊடாகவும் 15,000 மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் குறிப்பட்ட அமைச்சர், இதன் அடுத்த கட்டமாக சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு 30,000 பேருக்கு கிட்டவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.    

பொதுவாக கற்பிட்டி பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மாசடைந்திருப்பதன் விளைவாக நீலக் குழந்தை சிண்ட்ரோம் (Blue Baby Syndrome) போன்ற பாரதூரமான உயிர் கொல்லி நோய்கள் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், அப்பகுதியில் பொதுவாக மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தம்முடன் அங்கு வந்திருந்த சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X