2025 மே 15, வியாழக்கிழமை

கேரளா கஞ்சா கொண்டு வந்த மீனவர்கள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மே 12 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

இந்தியா - தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாகக் கேரளா கஞ்சா கொண்டு வந்த ஐந்து தூத்துக்குடி மீனவர்களுடன் இலங்கை மீனவர் ஒருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்றம் புதன்கிழமை(11) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மீனவர்கள், கடந்த 4ஆம் திகதி புதன்கிழமை கல்பிட்டி விஜய கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகளினால் கல்பிட்டிக்கு வடக்கே அமைந்துள்ள முள்ளிக்குளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, படகில் இருந்து  114 கிலோ 30 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
இதையடுத்து, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட குறித்த மீனவர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், புதன்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .