2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2016 ஜூன் 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேச செயலார் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சேவை இல்லத்தின் கூட்ட மண்டபத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அந்த பிரதேச மக்கள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மண்டபத்தில் கிராமத்தில் இடம்பெறும் முக்கிய பொதுக்கூட்டங்களுக்கு சமுகமளிக்கும் அதிகாரிகளும் பொதுமக்களும் அமர்வதற்குத் தேவையான கதிரைகள், மேசைகள் மற்றும் மின்விசிரிகள் என்பனவற்றைப் பெற்றுத்தருமாறு கோரி சமீரகம திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையிலான குழு, மாகாண சபை உறுப்பினரிடம் கோரிக்கைக் கடிதமொன்றையும் கையளித்துள்ளனர்.

அத்துடன், குறித்த மண்டபம் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலியும் அவசரமாக அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதேச மக்கள் மாகாண சபை உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த சேவை இல்லத்தில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X