Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களை, நேற்றுத் திங்கட்கிழமை (24) கைதுசெய்துள்ளதாகப் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 15 இலட்சம் பெறுமதியான வலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தடைசெய்யப்பட்ட குறித்த வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதனால் அப்பகுதியிலுள்ள குளம் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களும் புத்தளம் - கல்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாகத் தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் பின்னரே சந்தேகநபர்களைக் கைதுசெய்ததாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago