Princiya Dixci / 2017 மே 20 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
தங்க நகைகள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவினரால் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட மூவரும், மேலதிக விசாரணைகளுக்காக தங்கொடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், தங்கொடுவ, வென்னப்புவ, மாராவில, கொஸ்வத்த மற்றும் கந்தானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தங்க நகைகளைத் திருடியுள்ளதாக, குறித்த பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொடுவ மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றத்தை கட்டுப்படுத்தும் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்ட போதே, குறித்த மூவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 35 கிராம் 360 மில்லிகிராம் தங்க மாலை, 8 கிராம் நிறையுடைய தங்க உருண்டை, 360 மில்லிகிராம் தங்க பெண்டன் என்பனவற்றுடன் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் ௯றப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ௯றினர்.
தங்கொடுவ பொலிஸார், குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
24 minute ago
27 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
27 minute ago
45 minute ago