Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக புத்தளம் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணமான இடங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புத்தளம் நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் ஒன்பதாம் வட்டாரம், மக்கள் புரம், முள்ளிபுரம் மற்றும் வெஸ்டன் சோல்டன் வீதி பகுதிகளை செவ்வாய்க்கிழமை (24) மதியம் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடையாக இருந்த காரணிகளையும் கண்டறிந்து கொண்டார்.
வெஸ்டர்ன் சோல்டன் வீதியில் தூர்ந்து போன நிலையில் காணப்பட்ட பிரதான கால்வாயை துப்பரவு செய்யும் பணிகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, இந்த வடிகானுக்கு மேலால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற இருப்பதோடு, இந்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான பிரதான வாயில் கடவைகளை மறுசீரமைக்க வீட்டு உரிமையாளர்களை பணித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
45 minute ago
48 minute ago