Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
நுரைச்சோலை- லக்விஜய அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறிய நிலக்கரி தூசு காரணமாக, விவசாய செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக. உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இழந்தடி பிரதேசத்தில் நேற்று (23) இவ்வாறு புகை மண்டலமாக சாம்பல் தூசுகள் பிரதேசம் எங்கும் பரவியதாகவும் இதனால், பயிர்செய்கைகளில் அவை படிந்துக் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்துரைத்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர், நான் விவசாய காணியில் இருந்தபோது, திடீரென வௌ்ளை நிறத்தில் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் என் உடல் முழுவதும் சாம்பல் தூசுகள் படர்ந்தன. பின்னர், விவசாய காணியை பார்த்தபோது முழுவதும் வௌ்ளை நிறமாக காட்சியளித்தது என்றார்.
இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது, சுமார் அரை மணித்தியாலம் இந்நிலை நீடித்திருந்தால், மக்கள் சுவாசிக்க முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியிருப்பார்கள் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago