Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிவந்தனர் எனத் தெரிவித்து, தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருக்கும், பொதுமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகன்றன.
வடமேல் மாகாண நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து ஆணையாளர் வைத்தியர் அநுர செனவிரத்ன, வடமேல் மாகாண சமூக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தெருவனி நர்மதா ஆகியோரின் வழிகாட்டலிலும், வடமேல் மாகாண ஆயர்வேத திணைக்களம் மற்றும் புத்தளத்தில் இயங்கிவரும் ளுகுசுனு இன் அணுசரணையிலும் குறித்த ஆயர்வேத மருந்துப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
வன்னாத்தவல்லு பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஜே.எம்.நைஜீல், புத்தளம் பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர் ஏ.கே.ஏ. நிஹார், கற்பிட்டி பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் யு.எம்.ரயீஸ், மஹாகும்புக்கடவல பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் ஏ.எச். மில்ஹான் பாரிஸ், கருவலகஸ்வவ பிரதேச சமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் எம்.எல்.எச். பஹ்மி ஆகியோர் குறித்த ஆயர்வேத மருந்துப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025