Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன், எம்.எஸ்.எம். முஸப்பிர்
புத்தளம்- கொழும்பு வீதியில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை அகற்றப்பட்ட கட்டட மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள், தமக்கு நிரந்தரமாக இடங்களை வழங்குமாறு கோரி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புத்தளம்-கொழும்பு வீதி பௌத்த மத்திய நிலையத்துக்கு அருகில் திங்கட்கிழமை (16) காலை இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகின்றது.
30 குடும்பங்களைச் சேர்ந்த தாம் இப்பகுதியில் மீன்பிடித்து விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கும் இவர்கள் இப்பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுவது தொடர்பாக தமக்கு எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
புத்தளம் நகர சபைக்கு மாதாந்தம் வரிப்பணம் செலுத்தி வருவதாகவும் மின் கட்டணப் பட்டியல்கள் தம்மிடம் இருப்பதாகவும், புத்தளம் நகரில் பெய்துவரும் அதிகரித்த மழையின் காரணமாக தத்தளித்த நிலையில் தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே தாம் பாதைக்கு இறங்கியுள்ளதாகவும், நல்லாட்சியில் ஜனாதிபதியும் அரசாங்கமும் இது விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலை சீருடையோடு மாணவர்களும் இதில் கலந்து கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago