Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயல் வெளியில் நின்றிருந்த 49 வயதுடைய விவசாயி ஒருவர், கண்ணாடி விரியன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளாரென, புத்தளம் கல்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் புத்தளம் கரைத்தீவு பொன்பரப்பி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னக்கனி மசூத் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர், தனது வயலில் நின்ற போது, அவரது காலின் கீழால் மிதிபட்ட பாம்பு அவரது காலில் பலமாகத் தீண்டியுள்ளதையடுத்து மயக்கமடைந்த அவர், உடனடியாக வண்ணாத்திவில்லு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அங்கு அவர் உயிரிழந்துள்ளாரென திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இவரது மரணம் தொடர்பில் இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னர் பாம்பு தீண்டி உடலில் விஷம் ஏரியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை, உறவினர்களிடம் கையளித்ததாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
36 minute ago
45 minute ago