2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை கஞ்சா பொதிகள் மீட்பு

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி, உச்சிமுனை போட்டு வாடிய பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை கேரளக் கஞ்சாப் பொதிகளை, நேற்று (06) மீட்கப்பட்டுள்ளதாக, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கேரளக் கஞ்சா புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி கடற்படையினர், கற்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியை சுற்றிவளைத்த கற்பிட்டி பொலிஸார், போட் வாடிப் பகுதியில் மூன்று உரைப் பைகளில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட கேரளக் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது, மூன்று உரைப் பைகளிலும் 81 கிலோ 868 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட கற்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .