Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முகமாக, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் ஆலோசனையின் பேரில் அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையம், புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள மன்னார் தாய் - சேய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தினூடாக மரக்கறி, மீன் மற்றும் மலிகைப்பொருள்கள் வியாபாரங்களை மேற்கொள்வதற்கான கிராம சேவகர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்தல், மொத்த வியாபாரத்துக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்தல், மருந்துப் பொருள்கள் கொள்வனவு மற்றும் தானியங்கி இயந்திரம் மூலம் வங்கிகளில் பணம் பெற்றுக்கொடுத்தல் போன்ற சேவைகளை 032 3132102 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தகைய சேவைகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நகரசபை தன்னார்வ தொண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொலைபேசியூடாக வைத்திய ஆலோசனைகளை வழங்குவதற்கு டொக்டர் எம்.எஸ்.எம்.முனவ்வர், டொக்டர் ஏ.எச்.எம்.இல்ஹாம், டொக்டர் நசீப், டொக்டர் எச்.எம்.ஹனான், டொக்டர் சிராஸ் ஆகியோர் குறித்த அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தில் தன்னார்வ தொண்டர் சேவை கடமையில் உள்ளனர்.
புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸ், அதன் நிர்வாகிகள், சுகாதார அதிகாரி காரியாலயம், புத்தளம் மாவட்டச் செயலகம், புத்தளம் பொலிஸ் நிலையம், இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் அனுமதியோடு இந்த அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025