Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன், ஜூட் சமந்த, ரஸீன் ரஸ்மின், அசார் தீன்
2020 பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குழுவினர் இன்று (17) காலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷந்த பெரேரா தலைமையிலான குழுவினரே, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சந்திரசிறி பண்டாரவிடம், வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.
இதற்கமைய, புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், 11 பேர் போட்டியிடவுள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலில், பெண் வேட்பாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.
அத்துடன், இந்த தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் முஸ்லிம் ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago