Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம். சனூன்
புத்தளம் தேர்தல் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது வருட நிறைவை முன்னிட்டு, "தோப்பாகிய தனிமரம்" எனும் கருப்பொருளில் குறித்த அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் ௯றினார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“புத்தளம், வன்னாத்தவில்லு, முந்தல், கற்பிட்டி ஆகிய நான்கு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் வீதி புனரமைப்பு மற்றும் ஆரோ பிளேன் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுதல் என்பன வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
“இதற்கமைய, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஆரோ பிளேன் திட்டத்தின் கீழ், பாலாவி அஷ்ரப் மாவத்தை மீள்குடியேற்ற கிராமம், சமீரகம, கொத்தாந்தீவு கொலனி, விருதோடை மற்றும் கணமூலை ஆகிய கிராமங்களில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.
“இதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த நீர் சுத்திகரிப்பு வழங்கல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
“அத்துடன், கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட பெருக்குவற்றான், சமீரகம, முசல்பிட்டி, கற்பிட்டி பஸ் நிலைய வீதி மற்றும் கற்பிட்டி நகர வீதி என்பனவும் புத்தளம் நகர சபை எல்லைக்குற்பட்ட நூர்பள்ளி வீதி, கெனல் வீதி என்பனவற்றை புனரமைப்புச் செய்வதற்கான பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
“குறித்த அபிவிருத்திப் பணிகளை, புத்தளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அணியினரும், மு.கா. பிரதேச அமைப்பாளர்களும் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
“கட்சியின் மூத்த போராளிகள், பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
30 minute ago
39 minute ago