2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புத்தளம் மக்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

இனிவரும் நாட்களில் மிகவும் ஆபத்தான கட்டம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால் , கூட்டு முயற்சியினூடாக  புத்தளத்தை ஆட்டம் காண செய்துள்ள  கொரோனாவை வெற்றிக்கொள்ள முக்கூட்டு தலைமை தயாராகியுள்ளது.

புத்தளம் நகர சபை , புத்தளம் பெரிய பள்ளிவாசல் , அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டக் கிளை மற்றும் ஏனைய சிவில் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய விசேட நிவாரண செயலணியாக இந்த தலைமை உருவாகியுள்ளது.

இதன் ஆரம்பமாக மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ள அடிப்படை பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான  திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கென முடியுமான வகையில் உதவ முன்வருமாறு , புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் , புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.அப்துல் ஜனாப் , அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்ட தலைவர்  அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .