Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 18 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் என்பவற்றை, குருநாகல், வெல்லவ பிரதேசத்திலுள்ள கடையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குருநாகல், மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் கடையொன்றின் அறையிலிருந்தே, மேற்படி பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி அதிகாலை வேலையில் மேற்கொள்ளப்பட்ட குருநாகல் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஊடாகவே, நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பத்திரிகைகள், சுவரொட்டிகள், ஆவணங்கள், இறுவட்டுக்கள் உள்ளிட்ட 486 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலான சுலோகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும், நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
1 hours ago