2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலன்னறுவையில் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் போராட்டம்

Editorial   / 2018 மே 14 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை நீர்ப்பாசன காரியாலயம் மற்றும் பிரதேச நீர்ப்பாசன காரியாலயம் ஆகியவற்றில் பணியாற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், இன்று (14) பொலன்னறுவை நகரில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கடந்த வராம், பராக்கிரம நீர்ப்பாசன பொறியியலாளர், அசேல உதயங்க மீது, பொலன்னறுவை தெகே ஹெல பிரதேசத்தில் வைத்து, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய அரசியல்வாதியை  உடனடியாக கைது செய்யுமாறும் வலியுறுத்தி இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 1000 பேர், இரண்டு மணித்தியாலங்கள் வரை,  இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால், போக்குவரத்து நெரிசல் எற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X