Editorial / 2017 செப்டெம்பர் 24 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்கஹவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடபொல சந்தியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 6 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மலவிலிருந்து கஹவத்தே எல பகுதிக்குப் பயணித்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மரத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பொல்கஹவளை பகுதியைச் சேர்ந்த சமன் பிரியந்த (50), ரோஷனி பிரியங்கிகா (48) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி உட்பட மேலும் 6 பேர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago