2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தளம் தள வைத்தியசாலைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் தள வைத்தியசாலையில் பல்வேறு அபவிருத்திப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் வென்று பிரதம அதிதியாகவும் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள்னா என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், சிந்தக்க அமல் மாயாதுன்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக வடமேல் மாகாண சுகாதார அமைச்சினால் 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.

இதன்படி, அம்புயூலன்ஸ் தரிப்பிடம், அம்யூலன்ஸ் சாரதிகளுக்காக விடுதி நிர்மாணிப்பதற்காக எழுபது இலட்சம் ரூபாவும் மருந்து களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு கோடியும் வைத்தியர்கள் விடுதி நிர்மாணிப்பதற்காக இரண்டு கோடியும் விபத்து வார்ட் நிர்மாணிப்பதற்காக நான்கு கோடியும் பேபி வார்ட் நிர்மாணப்பணிகளுக்காக எழுபது இலட்சம் ரூபாவும் தாதிமார்களுக்கு விடுதி நிர்மாணப் பணிகளுக்காக ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான வார்ட் நிர்மாணிப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக மாகாண சுகாதார அமைச்சினால் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X