Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷார தென்னகோன்
பொலநறுவை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரி கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.
பொலநறுவை மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தொடர் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், தொடர் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தியின் முன்னுரிமையை இனங்கண்டு, அனைவருக்கும் நியாயத்துடன் வறுமையை ஒழித்தலே அனைத்து அபிவிருத்தித் திட்டங்களினதும் குறிக்கோளாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அபிவிருத்தி குறிக்கோளை நோக்கிப் பயணிக்கும் போது பௌதீக வள அபிவிருத்தி மட்டுமன்றி, மனித வள அபிவிருத்தியின் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி, அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் பின்னர் மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்ட ஜனாதிபதி, அபிவிருத்தியின் பேரில் பயிர்ச்செய்கை நிறுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கதுருவெல நகர அபிவிருத்தி செயற்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி, பொலநறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சந்தையையும் பார்வையிட்டார். இதன் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி, நிச்சயிக்கப்பட்ட திகதியிலேயே மக்கள் பயன்பாட்டுக்காக சந்தையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
2 hours ago