Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவால், புத்தளம் நகரம் வெறிச்சோடியுள்ளதுடன், மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்நிலையில், புத்தளம் நகர மருந்தகங்களில் இன்று (02) காலை பொதுமக்கள் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது, மக்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்து ஒரு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பித்திருந்தனர்.
புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா தொற்றுக்குளான பலர் இனங்காணப்பட்டுள்ளார், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
இதேவேளை, மக்கள் தொடர்ச்சியாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதாலேயே, நோய் தொற்றிலிருந்து அனைவருமம் பாதுகாப்பு பெற முடியுமென, சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

28 minute ago
34 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
52 minute ago
2 hours ago