Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 18 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
2014ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு நீர்கொழும்பு தமிழர் நலன்புரி மன்றம் ஞாயிற்றுக்கிழமை (17) நிதியுதவி வழங்கி கௌரவித்தது.
இந்நிகழ்வு, மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஜெயலிங்கம் தலைமையில் மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இதன்போது, வைத்தியத் துறைக்கு தெரிவான மாணவி சியாமளி, கலைத்துறைக்குத் தெரிவான மாணவிகளான எஸ். நுஸ்ரத் ஜஹான், எஸ்.சரண்யா ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழர் நலன்புரி மன்றத்தின் உப தலைவர்களான பி.ஜெயராமன், எம்.ஏகாம்பரம், செயலாளர் கே.ஆனந்தசிவம், பொருளாளர் எம்.நடராஜா, உறுப்பினர்களான வைத்தியர் தரிசித்து, ஏ. தேவானந்தா, ஆர்.சண்முக சுந்தரம், ராஜு நேத்தாஜி, பி.கதிர்வேல், ஜி.சசிதரன், பி.முருகவதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .