Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 30 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
கல்பிட்டி பிரதேச ஆற்று முகப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், சனிக்கிழமை (28) இரவு திடீரென வீசிய கடும் காற்றின் காரணமாக வள்ளம் கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கல்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டி வன்னிமுந்தல் பிரதேசத்தில் வதியும் 05 பிள்ளைகளின் தந்தையான அசனா மரைக்கார் தாஜுதீன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை மாலை வழமைபோன்று ஆற்று முகப்புக்கு தனியாக மீன்பிடிக்கச் சென்ற இவர், மாலை 05.30க்கு மனைவியோடு அலைபேசியில் தொடர்புகொண்டு, காற்று அதிகம் வீசுவதாகவும் வலையை விரித்து விட்டு கூடிய விரைவில் வீடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், வழமையாக இரவு 07 மணியளவில் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் அவரிடமிருந்து அடுத்த எவ்வித தகவலும் வராத காரணத்தால் வீட்டார் அவரின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அலைபேசி ஒலிக்கும் சத்தம் மட்டுமே கேட்டுள்ளது.
அதிகாலை வரையும் அவர் வீடு திரும்பாததால் ஞாயிற்றுக்கிழமை (29) காலை அவரைத் தேடிய போது அவருடைய வள்ளம் கவிழ்ந்திருந்த நிலையில் மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
புத்தளம் மற்றும் கல்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம் மரண விசாரணைகளை மேற்கொண்டு நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பு வழங்கி ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago