Princiya Dixci / 2016 மே 17 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துஷார தென்னக்கோன்
மீன்பிடிக்கச் சென்ற வேளையில் துரத்தி வந்த யானையிடமிருந்து உயிர் தப்புவதற்காக குளத்தில் பாய்ந்து இருவர் பலியான சம்பவம், ஹபரணையில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
17 வயதான சிறுவனொருவனும் 22 வயதான இளைஞன் ஒருவருமே இவ்வாறு நீரில் முழ்கிப் பலியாகியுள்ளதாக ஹபரணைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என 06 பேர், அபகஸ்வௌக் குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும் இதன்போது யானையொன்று இவர்களைத் தாக்குவதற்காகத் துரத்தி வந்த வேளை மேற்குறிப்பிட்ட இருவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025