ரஸீன் ரஸ்மின் / 2017 செப்டெம்பர் 30 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - சிலாபம் வீதியின் தில்லையடி பிரதேசத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த முஹம்மது சுல்தான் சஹாப்தீன் ( வயது 55) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று, புத்தளம், தில்லையடி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது மோதியதில், இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஜனாஸா, புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி, புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
36 minute ago
1 hours ago