2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் பெண் பலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

கொஸ்வத்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டி - தங்கொட்டுவ வீதியின் கிரிமெட்டியான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுப் புதன்கிழமை (24) மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் கிரிமெட்டியான லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த அசோகா ஸ்ரீயாணி (வயது 59) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவவிலிருந்து நாத்தாண்டி திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியினை மாறிக்கொண்டிருந்த உயிரிழந்த பெண் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பலத்த காயத்துக்குள்ளான பெண், உடனடியாக அங்கிருந்து லுணுவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனை, இன்று வியாழக்கிழமை (24), லுணுவில வைத்தியசாலையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரைக் கைதுசெய்துள்ள கொஸ்வத்தை பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X