2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கசிப்பு மீட்பு

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பை மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கசிப்பையும் மோட்டார் சைக்கிளையும் நேற்று வியாழக்கிழமை சிலாபம் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய பொலிஸார் சிலாபம் இரணவில வீதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர், பொலிஸாரைக் கண்டு, தான் பயணித்த மோட்டார் சைக்கிளை இடைநடுவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளுக்கருகில் சென்று சோதித்ததில் அதில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 48 போத்தல் கசிப்பு அடங்கிய ப்ளாஸ்டிக் கேன் ஒன்றுடன் பயணப் பையினையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பயணப் பையினுள் கால் மற்றும் அரை போத்தல் அளவுள்ள பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட கசிப்பும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவ்வாறு தப்பிச் சென்ற நபர் தனது வீட்டுக்குச் சென்று தனது சட்டவிரோத கசிப்புக்கள் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட ஆத்திரத்தில் தனது மனைவியை பலமாக அடித்து, உதைத்து விட்டு வீட்டிலிருந்தும் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த சந்தேக நபரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X