Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 07 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் தெளபீக், பைஷல் ஹாசிம் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு புத்தளத்தில் இன்று (07) நடைபெற்ற போதே புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது.
அதன்போது, குறிப்பாக கட்சியை விட்டு இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கக் கூடாது என்று உயர்பீட உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் நிலைப்பாடு இருந்தது.
எனினும், எம்.பிக்களான ஹாபீஸ் நஸீர், எச்.எம்.ஹரிஸ் தவிர்ந்த ஏனைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடாப்பிடியாக இருந்தார்.
இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் தெரிவு செய்யப்படார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதித் தலைவராகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மெளலானா பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை பிரதி தேசிய அமைப்பாளராகவும் கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் மீண்டும் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டனர்.
தவிசாளராக முழக்கம் மஜீத், செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தலைவராக ரவூப் ஹக்கீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எ. ஹரிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எல் தவம், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
18 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
18 minute ago
24 minute ago
28 minute ago