Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 02 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புளிச்சாக்குளம் 593 கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம், வடபத்துலோய, கீறியங்கல்லி, புதுக்குடியிருப்பு, ஐஞ்சுவத்த, தாராகுடி கொலணி ஆகிய 6 கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்த நிலையில் முன்னெடுக்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் விசனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஹக்கீம், இன்று வியாழக்கிழமை (02) காலை புத்தளத்தில் மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் மக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
மேற்படி கோரிக்கையில், தத்தமது கிராமங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதித் தொகை போதாமையினால், அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதோடு அன்றாடம் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த 593 கிராம சேவை பிரிவின் கீழ் ஒதுக்கப்படும் நிதி கீறியங்கல்லி பிரதேசத்துக்கு மாத்திரமே போதுமானதாக அமைகின்றமையால் இதர கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் பிற்போடப்படுவதாகவும், அரசாங்க பாடசாலை, பொது வைத்தியசாலை, பஸ் தரிப்பிட வசதி, வீதி அபிவிருத்தி, சுகாதார வசதிகள் என்பன முறையாக இல்லாமையினால் மக்கள் பலவித அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனித்தினியாகவோ அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராம சேவை பிரிவு என்ற அடிப்படையிலோ கிராம சேவை பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியினை குறித்த 6 கிராமங்களுக்கும் தனித்தனியாக உரிய முறையில் வந்து சேரும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப்பிரதேச மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமைச்சர் ஹக்கீம் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி விடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸிற்கு பணிப்புரை விடுத்ததுடன், இது சம்பந்தமாக உரிய அமைச்சரிடம் பேசி தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றையீஸ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முத்தலிப் வாபா பாறூக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன், ஆறாச்சிக்கட்டு பிரதேச அமைப்பாளர் கமால் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
8 minute ago
16 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
33 minute ago
37 minute ago