Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மே 25 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள மிகப்பழைமையான புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடங்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக மூன்று மாடிகளை புதிய கொண்ட நவீன வர்த்தக தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.
முதல் கட்டமாக பழைய கட்டடங்கள் தற்போது அகற்றப்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அடுத்த கட்டமாகக் கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த மூன்று மாடி கட்டடத்தில் முதல் தர நவீன வர்த்தகத் தொகுதி, காரியாலயம் மற்றும் கேட்போர் கூடம் என்பன உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.
புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட வங்கிகளை கணனி மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago