2025 மே 23, வெள்ளிக்கிழமை

தப்போவ கிராமிய வைத்தியசாலையில் 2 வாரங்களாக வைத்தியர்கள் இல்லை

Super User   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜஸ், ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க)

கருவலகஸ்வௌ சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவுக்குட்பட்ட தப்போவ கிராமிய வைத்தியசாலையில் கடந்த 02 வாரங்களாக வைத்தியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

குறித்த வைத்தியசாலைக்கு இன்றைய தினம் வழமையான வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த கர்ப்பினி பெண்கள்; சிறுவர்கள் 12 மணி வரை காத்திருந்தனர். அதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய பரிசோதனைகளினை நடாத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த கருவலகஸ்வௌ சுகாதார வைத்திய அதிகாரி, கடந்த இரண்டு வாரங்ளுக்கு முன் குறித்த கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றிய 02 வைத்தியர்களும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டுள்ளதினால் இந்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதனால் தப்போவ மற்றும் அதனை சூழவுள்ள மக்கள் பெரிதும் அசௌகரியத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X