2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 10 வயதுச் சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் - கொழும்பு வீதியில் மாரவில பிரதேசத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் 2 ஒன்றுடனொன்று மோதியே விபத்திற்குள்ளானது.

19 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்த நிலையில்  சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர்கள் கட்டுனேரிய பகுதியில் விளையாட்டு பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்கு உள்ளானார்கள். இதன்போது, மோட்டார் சைக்கிளில் தலைக் கவசமின்றி பின்னாலிருந்து பயணித்த மாணவரே உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .