2025 மே 21, புதன்கிழமை

அ'புரத்தில் 23 பாடசாலைகள் 25 வரை மூடப்படும்

Kanagaraj   / 2013 ஜூன் 20 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசன் போயாவை முன்னிட்டு அநுராதபுரத்தில் 23 பாடசாலைகள் இன்று வியாழக்கிழமை முதல் 25ஆம் திகதி வரை மூடப்படும் என்று வட மத்திய மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனிதப் பிரதேசங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்கு கடமைகளில் பெருமளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வெளி மாவட்டங்களிலிருந்து இவ்வாறு வருகை தந்துள்ள பாதுகாப்பு படையினருக்கு தங்கும் இடவசதி அளிப்பதற்காகவே இப்பகுதி பாடசாலைகள் மூடப்படுவதாக வட மத்திய மாகாண சபை தெரிவிக்கின்றது.

விடுபடுகின்ற மூன்று நாட்களுக்காக பிரிதொரு விடுமுறை தினங்களில் பாடசாலை நடத்துமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் வட மத்திய மாகாண சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X