2025 மே 22, வியாழக்கிழமை

கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 44 மாணவர்கள் திறமை சித்தி

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்; (நவோதயா பாடசாலை) 44 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகளை பெற்றுள்ளதாக வித்தியால அதிபர் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் இருந்து கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் பரிட்சைக்கு தோற்றிய 47 மாணவர்களுள் 44 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர் தெரிவித்தார்.

வர்த்தகப் பிரிவில் ஐந்து மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் ஐந்து மாணவர்கள் 2ஏ, 1 பீ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

வணிகப்பிரிவில் எம்.ஆர்.எம்.ரயீஸ், ஆர்.எம்.ரிஷாப், ஏ.ஆர்.அஸ்கியா, எம்.எஸ்.சிஹாரா, ஏ.கே.எப்.நுஸ்கியா ஆகிய மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதோடு, எம்.எஸ்.எம்.சிபாக், எஸ்.எம்.அஷாம், ஏ.அறூஸ், எஸ்.எம்.ரபாத், மற்றும் எம்.எல்.அப்ரோஸ் பானு ஆகிய மாணவர்கள் 2ஏ, 1பி சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் ஏனைய மாணவர்கள் 2ஏ, 1சி, 1ஏ, 2பி, 3பீ என்ற அடிப்படையில் சித்தியடைந்துள்ளனர். இதேநேரம் கலைப்பிரிவில்  ஜே.எம்.ரிலா 1ஏ, 2பி, என்.எப்.பர்லினா 1ஏ,2பி சித்திகளுடன் ஏனைய மாணவர்கள் 3 பி, 2 பி 1 சி  என்ற அடிப்படையில் சித்தி பெற்றுள்ளனர். 

வணிகப்பிரிவில் மாவட்டத்தில் பத்தாவது இடம்பெற்ற மாணவனும் இப்பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் அதிபர் ஸஹீர் தெரிவித்தார். 

இவ்வாறு சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்ககளையும் தெரிவித்துள்ள பாடசாலை அதிபர் ஸஹீர்,  இவ்வாறான சிறந்த பெறுபேற்றினை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலை வளர்ச்சியில் முன்னின்று செயற்படும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கும் அதிபர் ஸஹீர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • s a m ghadafy Friday, 22 March 2013 07:29 PM

    மாஷா அல்லாஹ்... மேலும் வளர வாழ்த்துக்கள். அதிபருக்குத்தான் முதலில் நான் நன்றி சொல்வேன்...

    Reply : 0       0

    mohamed azeem Saturday, 23 March 2013 06:17 AM

    கடையாமோட்டை என்றால் சும்மாவா?

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Tuesday, 26 March 2013 08:41 PM

    ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள் பல கோடி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X