2025 மே 23, வெள்ளிக்கிழமை

1 கிலோ கிராம் எடையுள்ள 2 கஞ்சா பொதிகள் அநுராதபுரத்தில் கைப்பற்றல்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த 1 கிலோ கிராம் எடையுள்ள 2 கஞ்சா பொதிகள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளன.

புல்மோட்டை பொலிஸ் விசேட பிரிவின் உபபொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்தேக நபர்களைப் பின்தொடர்ந்த பொலிஸார் அநுராதபுரம் புதிய நகர பஸ் தரிப்பிடத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம் புதிய நகர பஸ் தரிப்பிடத்தின் ஹொரவப்பொத்தானைக்குச் செல்லவிருந்த பஸ் வண்டியொன்றுக்குள் வைத்து கஞ்சா தொகையை பரிமாற்றம் செய்யும் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விலச்சிய பேமடுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே கஞ்சா தொகையைக் கொண்டு வந்துள்ளதோடு மஹதிவுல்வௌ 1ஆம் எல்லைப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் ஒருவரே அதனை திருகோணமலைக்கு கொண்டு செல்லவிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X