Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 ஜனவரி 24 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீலாத் தினத்தில் பிறந்த புத்தளம் காஸிமிய்யா
இறை நிராகரிப்பும் இணை வைப்பும் மனித உரிமை மீறல்களும் பொருளாதார அநீதிகளும் அரசோச்சும் எமது ஈழத் திருநாட்டில் ஏகத்துவத்தினதும் இறுதி தூதுத்துவத்தினதும் ஒளியை ஏந்திய ஷரிஆத் துறை கலாநியைங்கள் பிரகாசித்துக் கொண்டிருப்பதை காண்கிறோம்.
அவையனைத்தும் மதிக்கப்பட வேண்டியவைகளும் கௌரவிக்கப்பட வேண்டியவைகளுமே. அவைகளில் தாய் கல்லூரியாக புத்தளம் அல் - மதுரஸத்துல் காஸிமிய்யா விளங்குகிறது.
ஆம் இற்றைக்கு ஹிஜ்ரி நாட்காட்டி பிரகாரம் 132 (128 கிறிஸ்துவ நாட்காட்டி படி) வருடங்களுக்கு முன்னர் பிறை 12 – ரபிவுல் அவ்வல் 1401 ஹிஜ்ரியில் (10. 01. 1884 கி.பி) இந்த ஸ்தாபனம் தோற்றம் பெற்றது.
முஸ்லிம்களின் ஏழு நூற்றாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியங்களை கொண்டது புத்தளம் நகர். கி.பி.1348களில் தன்னாதிக்கமும், பிற மொழி அறிவும் பிற நாட்டு தொடர்பும் பொருளாதார நிபுணத்துவமும், விருந்தோம்பும் பண்பும் நிறையப் பெற்ற குறு நில மன்னன் தகியூதின் அப்துர் ரஹ்மானின் இறையாட்சி கண்ட பூமி இது.
கி.பி 1800களில் புத்தளத்திற்கு வருகை தந்த கேரளா, தமிழ் நாட்டு உலமாக்களினது துண்டுதலால் அப்போதைய புத்தளம் மக்கள் தமக்கோர் மார்க்க கலாபீடம் தேவை என்பதை உணரலாயினர்.
இச்சிந்தனையின் வலுவாக்கமே காஸிமிய்யாவின் தோற்றப்பாடாகும். அப்துல் ஹமீது மரைக்கார், இஸ்மாயில் மரைக்கார் ஆகிய இரு பெரியார்களின் அயரா முயற்சியினால் புத்தளத்தின் மிக பழைமை மிக்க பள்ளிவாயலான ஜதுருஸ் மஸ்ஜிதின் வெளித திண்ணையிலேயே மத்ரஸா ஸ்தாபிக்கப்பட்டது.
இதன் முதல் அதிபராகவும், பிரதான ஆசிரியராகவும் காயல் பட்டணத்தைச் சேரந்த மிஸ்கீன் ஆலிம் (ரஹ்) என்பார் கடமையாற்றியுள்ளார்.
அவரை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு வரை தென்னிந்திய அறிஞர்களாலேயே பாடப் போதனைகள் பெரும்பாலும் நடைபெற்றுள்ளன. இக்காலப் பகுதியில் காஸிமிய்யாவின் பாடத்திட்டத்தினை நிறைவு செய்தோர் தென்னிந்திய மத்ரஸாக்களுக்கு சென்று உயர் கல்வி பெற்று வந்தனர்.
தமதூர் மத்ரஸாவை சகல வசதிகளையுடைய கால நிலையமாக வளப்படுத்த வேண்டும் அதனை கட்டிக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் அப்போதைய இலங்கையின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களில் ஒன்றான புத்தளத்தைச் சேர்ந்த இ.சே.மு (ஈ.எஸ்.எம்) குடும்பத்தினர் முன்வந்தனர்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த முஹம்மது காஸிம் மரைக்கார் மத்ரஸாவை அமைப்பதற்காக் காணியையும் பராமரிப்புச் செலவுகளுக்காக தென்னங்காணியையும் வக்பு செய்தார்கள்.
கி.பி 1884 இருந்து 1942 ஆம் ஆண்டு வரை ஏழு பிரதான ஆசிரியர்களால் மத்ரஸா வழிநடாத்தப்பட்ட போதும் 1942ஆம் ஆண்டு காஸிமிய்யாவின் பழைய மாணவரும் தென்னிந்திய மத்ரஸாக்களில் துறை போகக் கற்றுத்தேர்ந்தவருமான அல்லாமா மஹ்மூத் ஆலிம் (ரஹ்) அவர்களிடம் காஸிமிய்யா ஒப்படைக்கப்பட்டது.
அன்னாரின் பதவிக்காலததை காஸிமிய்யாவின் பொற்காலம் என்பர். தனது வாழ்க்கையின் நாற்பது ஆண்டு காலத்தை ஷரீஆத் துறை அறிவை வளப்படுத்துவதற்காகவும், ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த மனிதர்களை உருவாக்குவதற்காகவும் அர்ப்பணித்தார்கள், அன்னாரின் இச்சேவையை கௌரவப்படுத்தி எமது நாட்டு அரசாங்கம் தபால் முத்திரை ஒற்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
காஸிமிய்யா அதன் ஆரம்ப நாள் முதல் இன்று வரை தனித்துவமான பாதையில் சென்றுள்ளது. அது மிகத் தெளிவான கல்வியல் சிந்தனையை பெற்றிருக்கின்றது.
இந்நாட்டின் தன்மையை, முஸ்லிம்களின் நிலையை அவர்களின் தேவையை எதிர்பார்ப்புக்களை மிகச்சரியாக அளந்து தனது மாணவ உருவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.
அறபு - ஷரீஆத்துறை பாடங்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாது மாணவர்கள் க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைகளுக்கு தயார்ப்படுத்தப்படுகின்றனர். உயர் வகுப்பு மாணவர்களுக்கு கணனி அறிவு வழங்கப்படுகிறது. அதுபோல் தொழில் முன்னணிப் பாடங்களும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
காஸிமிய்யா தனது பாடத்திட்டத்துடன் போதுமாக்கி கொள்ளும் மனப்பாங்னை மாணவர்களிடம் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் அறிவை மேலும் விருத்தி செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் கற்கை நெறிகளை நிறைவு செய்கின்றனர். அதுபோலவே வெளிநாடுகளிலுள்ள இஸ்லாமிய உயர் கலாபீடங்களில் கற்கை நெறிகளை தொடர்கின்றனர்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிளும் உள்ள கல்விமான்கள் உயர் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புளை அடிக்கடி மேற்கொண்டு தனது கல்விக் கோட்பாட்டையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கலந்தாலோசித்து தன்னை ஒரு மீள்பார்வை செய்து கொள்கிறது.
மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக தனியானதோர் நிழ்ச்சித்திட்டத்தையே தயார் செய்து நடைமுறைப்படுத்திவருகிறது. இங்கும் தன்னோடு போதுமாக்கிக் கொள்ளாது நாட்டின் நாலா பக்கங்களில் நடைபெறும் பயிற்சி முகாம்கள், செயல் அமர்வுகள், கருத்தரங்குகளுக்கு மாணவர்கள் அவ்வப்போது அனுப்பிவைக்கப்படுவர். அத்தோடு துறைசார் அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு விஷேட விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன.
காஸிமிய்யாவின் இன்னுமோர் சிறப்பம்சம் தான் அதன் ஆசிரியர் குலாமாகும். இவர்கள் ஒரே தன்மை கொண்ட கல்விப் பட்டறைகளில் உருவாகியவர்கள் அல்ல. பல்வேறு பட்ட கல்வி நிறுவனங்களில் உருவாகியவர்கள்.
இதனால் இங்கு குறுகிய வாதங்கள் தோற்றம் பெறுவதில்லை. அத்தோடு நாட்டின் முப்பெரும் தஃவா அமைப்புக்களுடன் தம்மை இறுகப் பிணைத்துக் கொண்டோராக உள்ளதனால் ஒரு தனிச் சிந்தனை முகாம் இங்கு செல்வாக்குச் செலுத்துவதில்லை.
சிந்தனை மோதல்களுக்கு மத்தியில் தான் முதிர்ச்சி தோன்றும் அர்ப்பண உணர்வுகளுடன் கற்பித்தல் பணியில் ஒரு பெறும் பங்களிப்பை பன்னெடுங்காலமாக எமது ஆசிரியர் குலாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.
1989ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை காஸிமிய்யாவின் அதிபராக மர்ஹூம் மஹ்மூத் ஹஸரத்தின் கனிஷ்ட புதல்வர் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (காசிமி, மதனி) மிகத் திறமையாக கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கல்லூரியின் பொருளாதாரம் நலிவுற்றிந்தாலும் போதுமாக்கிக் கொள்ளும் மனப்பாங்கு நிறையவே வளர்ச்சி அடைந்துள்ளது. உள்ளூர் வெளியூர் மக்களினதும் ஏனைய பொது ஸ்தாபனங்களினதும் உதவிகளும் நன்கொடைகளும் இச்சந்தர்ப்பத்தி;ல் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவைகளாகும்.
புத்தளம் அல் - மத்ரஸதுல் காஸிமிய்யா தனது கடந்த கால வரலாற்றில் படைத்த சாதனைகளும், மேன்மைகளும் பல இதனை கௌரவித்து 2009ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 25ஆம் திகதி எமது நாட்டு அரசாங்கம் மத்ரசாவின் புகைப்படத்துடன் தபால் திணைக்களத்தினுடாக முதல் நாள் தபால் உறையொன்றை வெளியிட்டு வைத்தது. எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக, அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்காகவும், இஸ்லாத்திற்காகவும் தன்னாலான முழு பங்களிப்புக்களையும் எமது காஸிமிய்யா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. சமூகம் இதனால் பயன்னடைவது போல் அதன் சகல விடையங்களிலும் அக்கரைக் கொண்டு, அதன் வளர்ச்சியில் பங்கெடுப்பது ஒரு மார்க்க கடமையாகும். இது வரை யாரெல்லாம் தமது உள்ளத்தால் அறிவாள், சொத்துக்களால் உதவினார்களோ அவர்களை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அருள்புரிவானாக.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago