Super User / 2011 ஜூன் 11 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு பிரதேச விற்பனை முகவர் ஒருவரின் கொலை தொடர்பில் மாராவில பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தகரின் கடைக்கு வைத்து இக்கொலை இடம்பெற்றுள்ளது. அவரின் சடலம் தும்மலதெனிய பொரலெஸ்ஸ வீதியில் உள்ள பாலம் ஒன்றிற்கருகில் வான் ஒன்றிலிருந்த நிலையில் வென்னப்புவ பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கொலைக்கு முன்னர் அவர் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இக்கொலையுடன் மேலும் சிலர் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டுள்ளவர் நீர்கொழும்பு பகுதியிலுள்ள பேக்கரிகளில் பொருட்களை பெற்று தனது வானில் வென்னப்புவ போன்ற பிரதேசங்களில் உள்ள கடைகள், ஹோட்டல்களுக்கு விநியோகித்து வந்துள்ளார். அடுத்த வாரம் அவரது ஒரு மகளுக்கு திருமணம் நடைபெற இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நபர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மகள் நீர்கொழும்பு பொலிஸிலும் முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸதர் மேற்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபரின் கொலை செய்யப்பட்ட உடல் வென்னப்புவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
33 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
37 minute ago
2 hours ago