Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 21 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
மஹாவலி சீ வலயத்தினுள் காட்டு யானைகளினால் மேற்கொள்ளப்படும் அட்டகாசங்கள் காரணமாக வருடமொன்றுக்கு சுமார் இருபது கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்படுவதாக காட்டு லாகா திணைக்களம் தெரிவிக்கின்றது.
மாதுரு ஓயா மற்றும் வஸ்பமுவ ஆகிய இரண்டு சரணாலயங்களுக்கிடையில் உள்ள இவ்வலயத்திலுள்ள பயிர் நிலங்கள், வீடுகள் உட்பட சொத்துக்களுக்குப் பலத்த சேதத்தை இக்காட்டு யானைகள் ஏற்படுத்தி வருகின்றன.
இதேவேளை கடந்த ஐந்து மாதங்களுக்குள் மாத்திரம் ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்தவுள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வனஜீவிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago