Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிஸ்மி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இரு சிறுவர் நூல்களின் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை (29) அநுராதபுரத்தில் அநுராதபுரம் சீ.ரி.சி. மண்டபத்தில் நடைபெற்றது.
பிஸ்மி பதிப்பகத்தின் வெளியீட்டு பணிப்பாளர் எம்.பி.எம்.பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அப்துல் வஹாப், ஓய்வு பெற்ற அதிபர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா, சீ.ரி.சி. மண்டப உரிமையாளர் முத்தலிப் ஹாஜியார் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் ரஜரட்டை பல்கலைக்கழ மருத்துவ பீட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது, நூல் அறிமுகம் மற்றும் சிறப்புரையினை காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி )நிகழ்த்தினார். நூலின் முதற் பிரதியை பொறியியலாளர் புர்ஹானுத்தீன் பெற்றுக்கொண்டார்
பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீட மாணவர் எம்.எஸ்.எம். நுஸ்ரி எழுதிய 'சிறுவர்களுக்கான இஸ்லாமிய கதைகள்" மற்றும் ரஜரட்டை பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர் எம்.எஸ்.எம்.நுஸைர் எழுதிய "படைப்புகள் மூலம் அல்லாஹ்வை அறிவோம்" ஆகிய இரு நூல்களே இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இந்நூல்களின் முதலாவது வெளியீட்டு விழா அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago