2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பூனைப்பிட்டி – கரம்பை வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 02 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பூனைப்பிட்டி தொடக்கம் கரம்பை வரையிலான 28 கிலோ மீற்றர் தூரமுடைய வீதியினை காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கற்பிட்டி பிரதேச சுதந்திர கட்சி அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்டர் அண்டனி, மேற்படி காபட் இடும் பணியினை ஆரம்பித்து வைத்தார். இவ்வீதி புணரமைப்புக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முப்பத்தைந்து கோடியே 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான ரியாஸ், எஹியா, கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் உட்பட கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X