2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மழை நீர்த்தாங்கிகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 02 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                                                    

அநுராதபுரம் மாவட்டத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும்  சிறுநீரக நோயாளர்கள் உள்ள குடும்பங்களுக்கு மழை நீர்த்தாங்கிகளை அமைத்துக் கொடுக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இடர்முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.

திரப்பனை, ரம்பாவ, மதவாச்சி ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுநீரக நோயாளர்கள் உள்ள குடும்பங்களுக்கு இடர்முகாமைத்துவ அமைச்சினால் 80 மழை நீர்த்தாங்கிகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இடர்முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் இடர்முகாமைத்துவப் பிரிவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X