2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் கடத்தப்பட்ட நபர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 03 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சூட்டுக் காயங்களுடன் ஆனமடுவ – சிலாபம் வீதியிலுள்ள சங்கட்டிகுளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.  

புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மத் நிஸ்தார் என்ற குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாரியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள தனது வீட்டிலிருந்து நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த நபர் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்புவதற்காக புத்தளம் நகரிற்குச் சென்றபோதே கடத்தப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.  இவரது உடம்பில் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினார்.

இவரது தலைப்பகுதியிலும் சூட்டுக் காயம் காணப்படுவதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த நபர் கடந்த பல வருடங்களாக புத்தளம் நகரில் போதைப்பொருள் பாவனைக்குட்பட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. படங்கள்: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

 


You May Also Like

  Comments - 0

  • zaki Wednesday, 04 January 2012 04:41 AM

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X