2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மிளகாய் சேனைக்கு மத்தியில் கஞ்சா தோட்டம்: இருவர் கைது

Kogilavani   / 2012 ஜனவரி 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வில்பத்துவ தேசிய சரணாலயத்திற்கு அருகில் மிளகாய் சேனையொன்றில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டமொன்றை சுற்றி வளைத்த ராஜாங்கனைப் பொலிஸார் சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரையும் மற்றுமொருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை  கைது செய்துள்ளனர்.

ஒன்றரை ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்தோடு அரை ஏக்கரில் மிளகாய்ச் செடிகளுக்கிடையில் கஞ்சா செடிகளும் பயிரிடப்பட்டுள்ளது.

ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில திஸாநாயக்காவிற்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்புப் படை வீரர் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தின் கீழ் கடமை புரிபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குனுவிலகம பகுதியைச் சேர்ந்த   இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிகாரி சந்தன விக்ரமரத்ன, வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி தயானந்த, அநுராதபுரம் பொலிஸ் அதிகாரி மகேஷ் சேனாரத்ன, தமுத்தேகம உதவி பொலிஸ் அதிகாரி தர்மசேன ரத்னாயக்கா ஆகியோரின் ஆலோசனைப்படி ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில திஸ்நாயக்காவின் வழிகாட்டலின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X