Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 04 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
புத்தளம் அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள கருவலகஸ்வௌ எட்டாம் கட்டை எனும் பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் விழுந்து கிடந்த சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகைகள், இரண்டாயிரத்து நாநூறு ரூபாய் பணம் மற்றும் கைப்பேசி என்பன அடங்கிய கைப்பை ஒன்றினைக் கண்டெடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அதன் உரிமையாளரைத் தேடி ஒப்படைத்துள்ளார்.
கருவலகஸ்வௌ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஆர். எச். எம். எஸ். கே. ராஜகருணா எனும் பொலிஸ் கான்ஸ்டபிலே இவ்வாறு பணப்பையை ஒப்படைத்துள்ளார்.
சாலியவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியன்குளம் கலவௌ வீதியில் வசிக்கும் ஆர். எஸ் ஜயவர்தன என்பவரின் மனைவியான எஸ். டப்ளிவ். ரஞ்சனி என்பவர் பஸ் தரிப்பிடத்தில் தனது நகைகள், பணம் மற்றும் கைப்பேசி என்பன அடங்கிய கைப்பையைத் தவறவிட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த கைப்பையைக் கண்டெடுத்துள்ள குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அதனுள்ளிருந்த பைக்பேசியில் குறித்த பெண்ணின் கணவருக்கு அழைப்பை மேற்கொண்டு விபரத்தைத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தான் தனது மனைவியுடன் கருவலகஸ்வௌ பொலிஸ் நிலையம் சென்று மனைவியின் தவறவிடப்பட்ட கைப்பையினை அதனுள்ளிருந்த பொருட்கள் மற்றும் பணம், நகைகளுள் எதுவிதக் குறைவுமின்றிப் பெற்றுக் கொண்டதாக அப்பெண்ணின் கணவர் தெரிவித்தார்.
ar Thursday, 05 January 2012 03:14 AM
முற்றிலும் முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்பு இது. முயற்சி செய்யுங்கள் எம்மவர்களே...........
Reply : 0 0
Abul Thursday, 05 January 2012 04:10 PM
நல்ல விடயம். கான்ஸ்டபிளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago