2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பிணை வழங்கப்பட்ட பிக்குவை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

திருட்டுக் குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்ட இரு பௌத்த பிக்குமார்களில் ஒருவர் தனது ஆடையில் மறைத்துவைத்திருந்த கைக்குண்டை கையில் எடுத்துக்கொண்டு நீதிபதியின் இல்லத்தினுள் நுழைய முற்பட்ட சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சிலாபம் மல்வத்தை கரவிட்ட பௌத்த விகாரையிலிருந்து பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் திருடப்பட்ட பொருட்களுடன் பௌத்த பிக்குமார்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்குமார்கள் இருவரும் சிலாபம் மாவட்ட நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியினால் பிணை வழங்கப்பட்டது.  பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்படி பௌத்த பிக்குமார்களை  நீதிபதியின் இல்லத்திலிருந்து வெளியே அழைத்துவந்தபோது இவர்களில் ஒரு பௌத்த பிக்கு தனது ஆடையினுள் மறைத்துவைத்திருந்த கைக்குண்டை கையில் எடுத்துக்கொண்டு நீதிபதியின் இல்லத்தினுள் நுழைய முற்பட்டுள்ளார்.

இருப்பினும் நீதிமன்ற சார்ஜன் பாய்ந்து சென்று பௌத்த பிக்குவின் கையிலிருந்த கைக்குண்டை பறித்தெடுத்துள்ளார். அப்பௌத்த பிக்குவை மடக்கிப்பிடித்த நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்ற சிறைக்கூடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இப்பௌத்த பிக்குவுக்கு வழங்கிய பிணை வாபஸ் பெறப்பட்டதுடன், அவர் மீண்டும் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X