Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 09 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
வில்பத்து சரணாலயத்தின் கடந்த வருட வருமானம் எண்பத்து ஏழு இலட்சம் ரூபாவிலும் அதிகமென சரணாலயத்தின் பாதுகாப்பு முகாமையாளர் தெரிவித்தார்.
சரணாலய வரலாற்றில் கிடைத்துள்ள அதிகூடிய வருமானம் இதுவாகும். இவ்வருடத்தில் மேலும் பன்மடங்காக வருமானம் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றதெனவும் அவர் கூறினார்.
கடந்த வருடம் எமது நாட்டின் சுற்றுலா பயணிகள் 22,970 பேர் சரணாலயத்தை பார்வையிட வந்ததுடன், வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் 2,291 பேர் வந்துள்ளனர். அத்தோடு 4,339 வாகனங்கள் சரணாலய பகுதிக்கு வந்துள்ளன. இவற்றின் மூலம் கடந்த வருட வருமானம் 8744516 ரூபாவாக அதிகரித்தது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2010.02.27ஆம் திகதி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் இச்சரணாலயம் திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சரணாலயத்தை பார்வையிட தினமும் பெருமளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகள் வந்த வண்ணமுள்ளதாகவும் சரணாலயத்தின் பாதுகாப்பு முகாமையாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago