2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்றவர்களுக்கு வீடுகள்

Super User   / 2012 ஜனவரி 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

சமூகசேவை அமைச்சு மூலம் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வீடமைப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக சேவை அமைச்சின் பணிப்பாளர் டி.ஸீ. ஜயமான்ன தெரிவித்தார்.

இத்திட்டதின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வீடுகள் 23 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா 5 வீடுகள் வீதம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வீட்டையும் அமைக்க 250,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது. கடந்த வருடம் அங்கவீனர் ஒருவருக்கு வீடொன்றினை நிர்மாணிக்க ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டதோடு அத்தொகை இவ்வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X