Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியைப் பார்வையிட அநுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்கு மிகவும் சுத்தமான உணவு வகைகளை பரிமாறுமாறு உணவகங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு அவற்றை மீறிச் செயற்படுவோர் தொடர்பாக தனக்கு உடனடியாகத் தகவல் தருமாறு அநுராதபுரம் மாநகர பிதா எச்.பீ.சோமதாஸ பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக அநுராதபுரத்திற்கு அதிகளவிலான மக்கள் வருகை தருவதினால் உணவகங்களின் உரிமையாளர்கள் உணவு வகைகளின் தரம் பாராது விற்பனையை மாதத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையடுத்தே மாநகர பிதா மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது விடயம் தொடர்பாக மக்கள் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளில் ஈடுபடத்தப்பட்டுள்ளதோடு உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு ஏ, பீ, சீ எனத் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு மக்களை செயற்படுமாறும் மாநகர பிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago